Monday, May 31, 2010

கலிமண்டிலம்

தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா +
புளிமாங்காய் + தேமா + புளிமா

வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்

2 comments:

agaramamuthan said...

வில்லோடு நாணும் விரைந்தேகு ++++ அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க


பாடல் அருமை. ஓரிடம் மட்டும் தளைதட்டுகிறது. உண்மையைச் சொல்வதென்றால் உங்கள் கவிதையை ஆழ்ந்து படிப்பவர்கள் நன்னெறி வழிசெல்வது உறுதி. நூலாகக் கொண்டு வாருங்கள்.

Tamilparks said...

அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்